பன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

பன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி? டிசம்பர் 29,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பல்வேறு துறைகளுடன் இத் துறை தொடர்புடைய துறை என்பதால் இங்கு பணி வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. இத் துறையில் பட்டம் அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு பாதைகள் தெளிவாக அமைகின்றன. இத் துறைப் படிப்புகளில் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, கட்டுரை எழுதுதல், கணிதவியல், கணிணிப் பயன்பாடு, பொதுத்திட்ட ஆய்வு, ஆடியோ வீடியோ தயாரிப்பு என்ற பல்வேறு பயிற்சிகள் தரப்படுகின்றன.

எனவே இப் படிப்புகளைப் படிப்பவர்கள் கல்வித் துறை, ஆராய்ச்சித் துறை, தூதரகப் பணி, நிர்வாகப் பணி, சட்டப் பணி, இதழியல், என்.ஜி.ஓ., பணி வாய்ப்புகள் என பல்வேறு பட்ட பணி வாய்ப்புகளைப் பெறலாம். ஐ.ஆர்., படித்தவர்களுக்கு பல்வேறு பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஐ.ஆர்., படித்தவர்களுக்கு ஆர்க்கிவிஸ்ட், டெமோகிராபர், டிப்ளமட், வெளிநாட்டு உறவு குறித்த ஆய்வாளர், வெளியுறவு அதிகாரி, இமிகிரேஷன் சிறப்பு அதிகாரி, இன்டலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட், லாங்வேஜ் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.வெறும் தகுதிகளை விட இத் துறை குறித்த நுணுக்கமான திறன்கள் தான் இப் பணி வாய்ப்புகளைக் கொடுக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us