உளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி? இதன் பரிவுகள் என்ன? | Kalvimalar - News

உளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி? இதன் பரிவுகள் என்ன? டிசம்பர் 21,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சைக்காலஜிஸ்ட் எனப்படும் உளவியலாளர்கள் மனிதர்கள் நடந்து கொள்ளும் முறையையும் மனித வளம் தொடர்பான செயல்களையும் ஆராய்ந்து மனிதர்களின் யோசிக்கும், உணரும் மற்றும் நடந்து கொள்ளும் விதங்களையும் அறிகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் மற்றவரிட மிருந்து தோற்ற ரீதியாகவும் எண்ண ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மாறுபடுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனையும் தனிப்படுத்திக் காட்டுவது எது? ஏன் சிலர் எளிதில் கோமடைகிறார்கள்? ஏன் சில மாணவர்கள் மட்டும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்? ஏன் சிலர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்? ஒருவரின் மனதை எப்படி அறிவது? இந்த வித்தியாசங்களின் காரணங்களை அறிவதன் மூலமாக தேவையற்ற பழக்கங்களை நிறுத்துவது, எண்ண ஓட்டத்தை சீரமைப்பது, நடந்து கொள்ளும் தன்மையை நேராக்குவது, திறன்களை மேம்படுத்துவது போன்றவற்றை உளவியலின் உதவி கொண்டு செய்ய முடிகிறது.

பிறருக்கு உதவும் தன்மை, மனிதர்களுடன் இணைந்து பணியாற்றும் விருப்பம் போன்ற குணங்களைப் பெற்றிருப்பவருக்கு உளவியல் மிகவும் பொருந்தக் கூடிய துறையாக அமையும். மனித மனதைப் பற்றிய படிப்பு என்பதால் இது சவாலான தேடலாக அமைகிறது.

உளவியல் துறையில் நாம் எடுத்துப் படிக்கும் சிறப்புப் படிப்புகளுக்கேற்ப நாம் எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் பிரச்னைகளும் மாறுபடுகின்றன. உளவியல் துறையில் அடிப்படையான பணிகள் என இவற்றைக் கூறலாம்.

* உணர்வு பூர்வமாக சமூக ரீதியான எண்ணம் தொடர்புடைய பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை தருவது

* சைக்கோமெட்ரிக் கருவிகள் மற்றும் உபகரணங்களின் உதவியோடு உள்ளார்ந்த மனப் பிரச்னைகளையும் அவற்றின் காரணங்களையும் ஆய்வு செய்வது

* அன்றாட வாழ்வின் பிரச்னைகளின் வெளிப்பாடாக சராசரி மனிதருக்கு ஏற்படும் பயம், பதட்டம், அழுத்தம் போன்றவற்றைகளை வதற்கும் சக மனிதருடனான உளவியல் ரீதியலான பிரச்னைகளை நீக்குவதிலும் உதவி செய்வது

* சிலர் நடந்து கொள்ளும் முறையை நல்ல விதமாக மாற்றியமைப்பது

* தீவிர நோய்களான டயபடிஸ், இதய நோய்கள், கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவுவது.

* போதைப் பொருட்களை உபயோகிப்பது, முற்றிய குடிப்பழக்கம் மற்றும் பிற மோசமான பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சமூக சீர்திருத்த மையங்களின் மூலமாக உதவி செய்து அவர்களை சாதாரண மனிதராக மாற்றுவது

* கணவன்மனைவி, பெற்றோர்குழந்தை போன்ற குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உதவுவது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் எண்ண ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும் உளவியலாளர்களே இத் துறையில் பெரிய சாதனைகளைச் செய்கிறார்கள்.

உளவியல் சிறப்புப் பிரிவுகள்
கிளினிகல் சைக்காலஜி மனரீதியான நோய்களைக் கண்டு பிடித்து, காரணங்களை அறிந்து குணப்படுத்துவதை இத் துறை மேற்கொள்கிறது. மன நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு இத் துறையினர் உதவியாக இருக்கிறார்கள். கவுன்சலிங் சைக்காலஜி

கவுன்சலிங் எனப்படும் ஆலோசனையை பய்னபடத்தி உணர்வு ரீதியான பிரச்னைகளையும் சமூக மற்றும் உளவியல் ரீதியிலான மன அழுத்தம், பயம் போன்ற பிரச்னைகளை சரி செய்வது இப் பிரிவினர் தான். இதில் சாதாரண மற்றும் அசாதாரண மனிதர்கள் அடங்குகிறார்கள்.

டெவலப்மென்ட் சைகாலஜி
மனிதன் பிறந்து, வளர்ந்து பல ஆண்டுகளை கடந்து முழு மனிதனாக மாறுவது வரை ஏற்படும் தோற்ற ரீதியிலான மற்றும் உணர்வு ரீதியிலான திறன்களை உருவாக்குவது, சமூக மாற்றங்களைப் பற்றிப் படிப்பது போன்றவற்றோடு இது தொடர்புடையது. அடிப்படையில் இது ஒரு ஆராய்ச்சிப் பிரிவு என்ற போதும் உளவியலின் பல பிரிவுகளில் இதன் உதவி முக்கியமானதாக அமைகிறது.

எஜூகேஷனல் சைக்காலஜி
மாணவர்களின் படிப்பு தொடர்புடைய உளவியல் ரீதியிலான அம்சங்களைப் படிக்கிறது இப் பிரிவு. மாணவர்கள் படிக்க தடையாக இருக்கும் டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகளை வெற்றி கொள்வது, சிறப்பாகப் படிக்கும் திறன்களை வளர்ப்பது, குழந்தைகளின் எண்ண ரீதியிலான பிரச்னைகளை நீக்குவது, ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறன்களை வளர்ப்பது போன்றவை இதன் கீழ் வருகிறது. சிறப்புப் படிப்புகளும், பள்ளிகளில் தரப்படும் ஆலோசனையும் இதன் முக்கியப் பணியாக உள்ளது.

மனிதவள/நிறுவன நடத்தை/தொழில் உளவியல் (Human Resources/ Organisational Behaviour/Industrial Psychology): இந்தியாவில் உளவியல் தொடர்புடைய புதிய துறைகளாக எச்.ஆர். மற்றும் ஓ.பி. துறைகள் உள்ளன. தனிமனிதனின் திறமையை முழுமாக வெளிக் கொண்டு வந்து, அவர் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தி தொழில் ரீதியாக வெற்றி பெறுவதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் உணரத் தொடங்கியுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us