மைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும். | Kalvimalar - News

மைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும். டிசம்பர் 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சில ஆண்டுகளுக்கு முன் வரை மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி போன்ற படிப்புகள் பற்றி மிக அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்தியாவில் இந்தத் துறைகளில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை என்றே கூறலாம். எனினும் மருத்துவம், பயோகெமிஸ்ட்ரி, ஜெனிடிக்ஸ், மாலிகூலர் பயாலஜி, எகாலஜி போன்ற துறைகளில் அதிகம் பயன்படும் மைக்ரோபயாலஜி படிப்பானது தற்போது மிகவும் பிரகாசமான வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. வெறும் பட்டப்படிப்பு முடிப்பவரை விட இதில் பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கே வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன.

மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற தகுதி பெறுபவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. இரவு பகல் பாராமல் உழைக்கும் மனப்பாங்கு உடையவராகவும் எதையும் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்பவராகவும் அடிப்படை குண நலன் உடையவருக்கு இத் துறை மிகவும் பொருந்தும். பெரிய நவீன மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றில் இதை முடித்தவர்கள் வேலை பார்க்கலாம். மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், உணவுப் பொருள் உற்பத்தி கூடங்கள், குடிநீர் பதப்படுத்தும் நிறுவனங்கள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us