பஞ்சாப் மற்றும் அரியானா தலை நகரான சண்டிகாரில் உள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும். | Kalvimalar - News

பஞ்சாப் மற்றும் அரியானா தலை நகரான சண்டிகாரில் உள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும். நவம்பர் 23,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டிக்களும் இன்ஜினியரிங் கல்லூரிகளும் மட்டும் தான் சிறந்த இன்ஜினியரிங் படிப்புகளைத் தருகின்றனவா? கடுமையான கிராக்கியுள்ள டாப் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டரும் ஒன்று. இது மத்திய அறிவியல் உபகரணக் கழகத்தால் நடத்தப்படுவது. சுவிட்சர்லாந்திலுள்ள சுவிஸ் பவுண்டேஷனின் ஒத்துழைப்போடு இது  செயல்பட்டுவருகிறது. இது பின்வரும் படிப்புகளை நடத்துகிறது.

* டிப்ளமோ இன் இன்ஸ்ட்ருமெண்ட் டெக்னாலஜி 3 ஆண்டு படிப்பு
* அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் மெக்கட்ரானிக்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் (4 ஆண்டு படிப்பு)
* அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் டை அண்ட் மோல்ட் மேக்கிங் (4 ஆண்டு) அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் மெக்கட்ரானிக்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் படிப்பை ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகரித்துள்ளது. மற்ற 2 படிப்புகளையும் மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் படிப்புகள் ஹைடெக் மெஷின்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன. நடைமுறைப் பயிற்சிக்கு அதிகமான முக்கியத்துவம் தரும் இந்தப் படிப்புகளைப் போல பிற நிறுவனங்களின் படிப்புகள் நடைமுறைப் பயிற்சியைத் தருவதில்லை. தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உபகரணங்களையும் உபபொருட்களையும் இது செய்து தருவதால் படிக்கும் போதே நடைமுறைத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தகுதியுடையவர் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மூலமாகத் தான் இப்படிப்புகளில் சேர முடியும். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம் பெறுகின்றன. ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை விடுதிக் கட்டணம் உட்பட பெறப்படுகிறது. இது பற்றிய விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. பார்த்து விண்ணப்பிக்கவும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us