நான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா? | Kalvimalar - News

நான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா? நவம்பர் 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களைப் போலவே இன்று பல பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் விரும்புகின்றனர். எனவே தான் வங்கிகளின் கிளரிகல் பணியிடங்களுக்குக் கூட உங்களைப் போன்ற தகுதியுடைய எண்ணற்றவர்கள் மோதுகின்றனர். சிடாக் என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர், புரொகிராம் கோ ஆர்டினேட்டர் போன்ற பதவிகள் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

இதற்கு பி.இ., பி.டெக்.,இவற்றில் ஒன்றை கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி., பாடங்களுடன் முடித்திருப்பவர்களும், எம்.சி.ஏ.,தகுதியைப் பெற்றிருப் பவரும் விண்ணப்பிக்கலாம். இது போன்ற பணிகளில் வேலைக்கான உத்தரவாதத்தை விட மன நிம்மதி தான் பலருக்கும் இதைத் தேர்வு செய்ய
முக்கியக் காரணமாகிறது.

நீங்கள் சிடாக் என்று ஒரே ஒரு நிறுவனத்தை மட்டுமே இலக்காக வைத்துக் கொள்ளாமல் பொதுத் துறை நிறுவனங்கள் என்று கூட இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us