பரஸ்பர உறவுத் தன்மை: இன்டர்பெர்சனல் ஸ்கில் என ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த பழகும் தன்மை மிகவும் முக்கியம். மிக அவசியமானது அந்த நிர்வாகத்தில் பணி புரிபவருக்கு இடையே நிலவும் உறவுத் தன்மை. இதை இன்டர் பெர்சனல் திறன் அதிகம் பெற்றுள்ள மேலாண் நிர்வாகிகளால் தான் உறுதி செய்ய முடியும். இப்போதெல்லாம் இது போன்ற திறன்களை சிறப்புப் பயிற்சி மூலமாகவே சில நிறுவனங்கள் தருகின்றன.
குழுத் தன்மை: கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் தனிப்பட்ட வீரர்கள் சிலர் தங்களது திறமையைக் காட்டினால் மட்டும் வெற்றி பெற முடிகிறதா? அனைவரது திறனையும் ஒருங்கிணைக்கும் குழுத் தன்மை இருந்தால் தான் வெற்றி சாத்தியமாகிறது. இது தான் ஒரு நிர்வாகத்திற்கும் பொருந்துகிறது. தனது திறமையை வெளிப்படுத்துவதை விட தனது நிர்வாகத்திற்காக சிறப்பாகப் பணி புரியும் தன்மை அந்த ஊழியர்களிடம் நிலவினால் மட்டுமே அந்த நிறுவனத்தால் சாதனைகளைச் செய்ய முடியும். இந்தத் தன்மையை உருவாக்கும் குணாதிசயம் உங்களிடம் கட்டாயம் வேண்டும்.
தனிநபர் குணம், ஊக்கப்படுத்தும் குணம் மற்றும் நேர மேலாண்மை மேலே குறிப்பிட்டுள்ள தன்மைகளோடு ஒத்த தன்மையுடையவை இவை. ஒரு நிர்வாகிக்குத் தேவையான குணம் ஊக்கப்படுத்தும் குணம். சாதாரணமாக ஒரு ஊழியரின் திறன் வெளிப்படுவதை விட இது போன்ற சிறப்பான ஊக்கப்படுத்துதலால் அதே ஊழியரின் திறன் எக்கச்கமாக வெளிப்படுகிறது. அவரது நேர மேலாண்மை என்பதும் அவருக்கு எளிதாகிறது.
உங்களது தகுதிகளை விட உங்களது ஆளுமை எனப்படும் பர்சனாலிடி என்பதே உங்களது வெற்றியை தீர்மானிக்கிறது என்பதை நீங்கள்
மனதில் கொள்ள வேண்டும். உங்களது குடும்பத்தினரை விட்டே உங்களது பலம் பலவீனங்களைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். இது உங்களை மேம்படுத்திக் கொள்ள மிகவும் உதவும். மேலும் உங்களைப் பற்றி நீங்களே கணக்கிடும் பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள். வெற்றி எளிதாகும்.