இன்ஸ்டிடியூட் ஆப் பயோஇன்பர்மேடிக்ஸ் அண்ட் அப்ளைடு பயோடெக்னாலஜி நிறுவனமானது கர்நாடகா அரசும் ஐ.சி.ஐ.சி.ஐ. பாங்கும் இணைந்து நடத்தும் பயோ இன்பர்மேடிக்ஸ் கல்வி நிறுவனம். இது 4 விதமான படிப்புகளைத் தருகிறது.
* போஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் பயோ இன்பர்மேடிக்ஸ் 18 மாதப் படிப்பு
* போஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் கெமிஇன்பர்மேடிக்ஸ் 18 மாதப் படிப்பு
* சர்டிபிகேட்/டிப்ளமோ இன் பயோ டெக்னிக்ஸ் 8/14 மாதப் படிப்பு
* அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் ஆர்கானிக் சின்தசிஸ் 9 மாதம் இந்தப் படிப்புகள் வரும் நவம்பரில் துவங்க இருக்கின்றன.
லைப் சயின்ஸ், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், பார்மசி, மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் போன்ற ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்போர் முதல் படிப்பில் சேரலாம்.
வேதியியலில் எம்.எஸ்சி., பார்மசியில் பட்டப்படிப்பு/பட்ட மேற்படிப்பு, கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ./பி.டெக். படித்திருப்போர் 2வது படிப்பில் சேரலாம். லைப் சயின்சில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜியில் பி.டெக். மற்றும் எம்.பி.பி.எஸ். படித்திருப்போர் 4வது படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் நுழைவுத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும்.
இந்த நிறுவனத்தின் முகவரி
Institute of Bioinformatics and Applied Biotechnology,
G5 Tech Park Mahal, ITPB,
White Field Road, Bangalore 560 066.
www.ibab.ac.in