மனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா? இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா? | Kalvimalar - News

மனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா? இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா? செப்டம்பர் 18,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.

எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டுபட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net. இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

விண்ணப்பம் பெறும் முகவரி
Indian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT), SaketMaidangarhi Marg,
New Delhi – 110 030.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us