ஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்புசெப்டம்பர் 06,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமதாபாத், பெங்களூரு, கோல்கட்டா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ராஞ்சி, ரோடக், ஷில்லாங் ஆகிய இடங்களில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்புகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவையாகவும் எனவே கடுமையான போட்டியை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. அடுத்த கல்வியாண்டில் இவை நடத்தும் படிப்புகளுக்கான அகிய இந்திய பொது நுழைவுத் தேர்வான கேட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வானது குறிப்பிட்ட நாளில் நடத்தப்படாமல், அக்டோபர் 27 முதல் நவம்பர் 24க்குள் பல்வேறு நாட்களில் பல்வேறு போட்டியாளர்களுக்கும் நடத்தப்படும். பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். தற்போது பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் முகவரி ஒன்றைப் பெற்றிருப்பது அவசியம். ஆக்சிஸ் பாங்கின் குறிப்பிட்ட கிளைகளில் கேட் 2010 வவுச்சர் என்று கேட்டு வாங்க வேண்டும். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 27 வரை இது கிடைக்கும். இதன் விலை ரூ.1400. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.700 மட்டுமே. எத்தனை ஐ.ஐ.எம்.களுக்கு ஒருவர் விண்ணப்பித்தாலும் ஒரே ஒரு வவுச்சரைப் பெற்றால் போதும். யாருடைய பெயரில் இது வாங்கப்படுகிறதோ அவருக்கு மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

பின்பு www.catiim.in என்னும் இணைய தளத்திற்குச் சென்று ஆன்லைனில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். முழு விபரங்களையும் அதே இணைய தளத்திலேயே பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us