பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன? | Kalvimalar - News

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன? செப்டம்பர் 04,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., ஐ.டி., எம்.எஸ்சி., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.எஸ்சி., இகாமர்ஸ், எம்.சி.ஏ., லேடரல் என்ட்ரி (பிஜிடிசிஏ தகுதிக்கானது), பி.ஜி.டி.சி.ஏ., ஆகிய படிப்புகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் செமஸ்டர் முறையில் அஞ்சல் வழியில் நடத்துகிறது. இது தவிர எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி., பிசிக்ஸ், எம்.எஸ்சி., ஓட்டல் மேனேஜ்மென்ட், எம்.காம்., பாங்கிங் மேனேஜ்மென்ட், எம்.காம்., பினான்சியல் மேனேஜ்மென்ட், எம்.காம்., கூட்டுறவு, எம்.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எம்.எல்.ஐ.எஸ்., ஆகிய படிப்புகளையும் இந்த பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் நடத்துகிறது.

இந்த படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு தற்போது தான் வெளியாகியுள்ளது. எனவே உடனடியாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. இதை நேரடியாக பல்கலைக்கழகத்திலிருந்தும் தபால் மூலமாகவும் பெறலாம். மேலும் இதை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து நிரப்பி பின்பு திரும்ப அனுப்பும் போது கட்டண டி.டி.,யுடன் அனுப்பலாம். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் ரூ.500.

பல்கலைக்கழகத்தின் இணைய தள முகவரி: www.bdu.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us