பிளஸ் 2 முடித்துள்ளேன். திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார்கள். சேரலாமா? | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்துள்ளேன். திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார்கள். சேரலாமா?ஆகஸ்ட் 31,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை தவிர தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் சிலவற்றில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கும் மையங்களில் சிறப்பான படிப்புகள் நடத்தப்படுவது மாணவர்கள் பலருக்குத் தெரியாது. இது நடத்தும் படிப்புகளில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் நீங்கள் சேர்த்துக் கொள்ளப் படுவீர்கள் என்றாலும் ஒரு வாய்ப்பு இருப்பதை அறியவும். இந்த மையத்தில் பின்வரும் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
* M.Sc. Computer Science
* M.Sc. Information Technology
* M.Sc. Software Engineering

இந்தப் படிப்புகளுக்கான கல்வித் தகுதி பிளஸ் 2வில் ஒரே தடவையில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் பாஸ் செய்திருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us