எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் போன்ற வங்கிகளில் அலுவலகத்துக்குள்ளேயே மேற்கொள்ள வேண்டிய மார்க்கெட்டிங் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா?ஜூலை 31,2010,00:00 IST
உண்மை தான். வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளரிடம் ஏற்கனவே அவர்கள் பெற்றிருக்கும் சேவையை மேம்படுத்திட செய்ய வேண்டிய மார்க்கெட்டிங் பணிகள் தான் இவை. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், மியூச்சுவல் பண்ட் என இன்று வங்கிச் சேவை பன்முகம் கொண்டதாக இருப்பதால் இவற்றுக்கான மார்க்கெட்டிங் தேவைகளும் அதிகமாக இருக்கிறது.
அடிப்படையில் ஓரளவு தகவல் தொடர்புத் திறன் பெற்றிருப்பவருக்கு இந்தப் பணி வாய்ப்பு மிகவும் பொருந்தும். எனவே நல்ல சம்பளமும் பெறலாம். மார்க்கெட்டிங் என்றால் அது வெளியே தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டால் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்.