லிபரல் எஜுகேஷன்! | Kalvimalar - News

லிபரல் எஜுகேஷன்!

எழுத்தின் அளவு :

கல்வி கற்பது என்றால் என்ன? வெறும் பட்டம் பெறுதல் என்பதுதான் கல்வி கற்றலா? அல்லது கல்வி கற்றல் என்பது விடுதலையடைவதா? கல்வி என்பது மாணவர்களிடையே, விசாரணையையும், தேடலையும், புதிய சிந்தனை முறைகளை கண்டுபிடித்தலையும், நுணுக்கமான பகுப்பாய்வையும், படைப்பாக்கத் திறனையும், எப்போதுமே கற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கையும் உருவாக்குவதாய் அமைய வேண்டும். குடச்ண்தண குஞிடணிணிடூ ணிஞூ ஃடிஞஞுணூச்டூ உஞீதஞிச்tடிணிண(குகுஃஉ) என்ற கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தியதன் நோக்கம், பழைய முறையில் உலகைப் பார்க்கும் தன்மையிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளித்து, அவைகளைப் பற்றி கேள்வியெழுப்பி மற்றும் சவால் விடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உதவி செய்வதேயாகும். லிபரல் என்ற வார்த்தைக்கு ஒரு துரதிஷ்டமான அர்த்தம், தடைகளிலிருந்து விடுதலைப் பெறுதல் என்பதாக மட்டுமே இருக்கிறது. குகுஃஉ, தனது மாணவர்கள், சமூகத்தில் ஒரு தெளிவான அறிவுபெற்ற மற்றும் விடுதலையடைந்த மனிதர்களாக விளங்கும் வகையில், அவர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நற்பண்புகள், கவனமும் அக்கறையும் கொண்ட மற்றும் பொறுப்புத்தன்மை ஆகிய பண்புகளை அவர்கள் பெற்றிருப்பார்கள். கோட்பாடுகளின் அடிப்படையிலான கற்பித்தலை, குகுஃஉ, ஊக்குவிக்கிறது. "கற்றல் என்பது முடிவில்லாத ஒரு பயணத்தின் ஆரம்பம்". இந்தக் கோட்பாடுதான், நாளந்தா மற்றும் தட்சசீலா போன்ற உலகப்புகழ்பெற்ற பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்டது. ஒரு மாணவர், தான் தேர்வுசெய்த பாடத்தில் தேவையான அறிவைப் பெறுவதுடன், நெறிமுறை மற்றும் மதிப்பு சார்ந்த வாழ்க்கைக் கோட்பாட்டு அறிவையும் பெற வேண்டும். சமூக மற்றும் கலாச்சார ரீதியாக விழிப்புணர்வுடன் இருப்பதோடு, சிறப்பான தகவல்தொடர்பு திறனையும் பெற்றிருக்க வேண்டும். இவையே, ஒருவரின் வாழ்வில் சிறப்பான வெற்றியைக் கொண்டுவரும். லிபரல் எஜுகேஷன் என்பதன் இறுதியான லட்சியம் என்னவெனில், ஒரு மாணவருக்கு, தனது சமகால சமூக நிகழ்வுகளை கேள்வி கேட்கும் ஆற்றலை வழங்குவதோடு, தனக்கு கிடைக்கும் சமூக சூழலில், தனக்கான மன அமைதியைப் பெறும் நிலையை உருவாக்கித் தருவதுதான். ஒரு மாணவர் என்ன படிக்க விரும்புகிறாரோ, அதை அவர் விரும்பும் வகை முறையிலும், விரும்பும் விதத்திலும் படிக்கும் வாய்ப்பை வழங்குவதை குகுஃஉ வழங்கும் லிபரல் எஜுகேஷன் நோக்கமாக கொண்டுள்ளது. குகுஃஉ வழங்கும் படிப்பு பற்றிய விபரங்கள் இக்கல்வி நிறுவனத்தில் லிபரல் படிப்பை மேற்கொள்ளும்போது, முதல் இரண்டு ஆண்டுகள் பவுன்டேஷன் ஆண்டுகள் எனப்படுகின்றன. இந்த காலகட்டத்தின்போது, மாணவர்கள் 30 படிப்புகளை மேற்கொள்கிறார்கள். 4 இணிணூஞு படிப்புகள் மற்றும் 5 அறிவு உலகங்களிலிருந்து 26 படிப்புகளை மேற்கொள்கிறார்கள். ஸ்பெஷலைசேஷன் ஆண்டுகள் அடுத்த 2 இறுதி ஆண்டுகளில், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடத்தை தேர்வுசெய்து, அதில் ஸ்பெஷலைசேஷன் செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள். இணிணூஞு மற்றும் உடூஞுஞிtடிதிஞு பாடங்களைச் சேர்த்து, இந்த 2 ஆண்டுகளில் மொத்தமாக 11 பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கும். இணிணூஞு படிப்பு விபரங்கள் நெறிமுறைகள்(உtடடிஞிண்) தர்க்கவியல்(ஃணிஞ்டிஞி) மேடைப் பேச்சு நல்ல பேச்சு வன்மை மற்றும் பகுப்பாய்வு சிந்தனை 5 அறிவு உலகங்கள் தொடர்பான படிப்புகள் செயல்படுதல் மற்றும் விசுவல் ஆர்ட்ஸ் மானுடவியல் இலக்கியம் மற்றும் மொழியியல் சமூக அறிவியல் மற்றும் பாலின ஆய்வுகள் அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் பட்டப் படிப்புகள் * இளநிலை வணிக மேலாண்மைப் படிப்பு * பி.எஸ்சி., உளவியல் * பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்களை சேர்க்க... குகுஃஉ வழங்கும் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நுழைவுத்தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு ஆகிய அம்சங்கள் பின்பற்றப்படுகின்றன. அக்டோபர் 15ம் தேதி முதல் சேர்க்கை செயல்பாடு தொடங்குகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us