பிற மாநில வேளாண் பல்கலைக் கழகங்களில் சேர வாய்ப்பு | Kalvimalar - News

பிற மாநில வேளாண் பல்கலைக் கழகங்களில் சேர வாய்ப்புஜனவரி 09,2010,15:37 IST

எழுத்தின் அளவு :

கோவை: இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் வேளாண்மை தொடர்பான பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றி கோவை வேளாண் பல்கலை முதல்வர்(வேளாண்மை) ஜெயபால் கூறியுள்ளதாவது:


டில்லியில் உள்ள அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் சார்பில், வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளில்(கால்நடை பராமரிப்பு தவிர) சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. மத்திய, மாநில வேளாண் பல்கலைகளில் இப்படிப்புக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்த நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மீன் வளர்ப்பு, மனையியல்,பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் பொறியியல், பால் பண்ணை தொழில்நுட்பம், உணவு அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வேளாண் விற்பனை, வங்கி மற்றும் கூட்டுறவு ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.


பிற மாநில வேளாண் பல்கலைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வு உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.


கல்வித்தகுதி: பனிரெண்டாம் வகுப்பு அல்லது சமமான கல்வித் தகுதி தேவை. பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வேளாண்மை, மனையியல் போன்ற பாடங்களை மேல்நிலையில் படித்தவர்களும் தேர்வு எழுத தகுதி உடையவர்கள்.


தேர்வுக்கான விண்ணப்ப படிவம் ஜன. 29 முதல் பிப். 16 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பிப். 16 வரை பெறப்படும். இந்தியாவின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பிப்., 23 வரை அனுப்பலாம். நுழைவுத் தேர்வு ஏப். 17ல் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு டில்லியில் ஜூன் 15 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.


‘டீன் (வேளாண்மை), வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோவை-641 003’ என்ற முகவரியில் 425 ரூபாய் பணமாக மட்டுமே செலுத்தி விண்ணப்ப படிவத்தை நேரில் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 225 ரூபாய் செலுத்தினால் போதும்.


அருகில் உள்ள சிண்டிக்கேட் வங்கி கிளைகளிலும் பணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறலாம். தபாலில் பெற, ’Exam Cell/Education Division, ICAR KAB II, PUSA, New Delhi - 110012’ என்ற முகவரிக்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம். உடன் 450 ரூபாய்க்கான டி.டி., இணைக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாய்க்கான வரைவோலை(டி.டி) இணைக்க வேண்டும். DDG(Education), ICAR என்ற பெயரில் டில்லியில் பெறத்தக்க வகையில் டி.டி.,யை பெற வேண்டும். இவ்வாறு, ஜெயபால் கூறியுள்ளார்.


 


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us