கோவை: “தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 44 ‘மாதிரிப் பள்ளிகள்’ கட்டப்படவுள்ளன,” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் கூறினார்.
மத்திய அரசால் துவங்கப்பட்ட ‘சர்வசிக்ஷ அபியான்’ இயக்கம் போல், 9, 10 ஆகிய வகுப்புகளுக்கென ‘ராஷ்ட்ரிய மத்யம சிஷ்யா அபியான்’(ஆர்.எம்.எஸ்.ஏ) எனும் திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் இடைநிலைக் கல்வி மேலாண்மை தகவல் திட்டங்களுக்கு, 2010-2011ம் ஆண்டுக்கான திட்டம் மற்றும் தகவல் தயாரிப்பு பணிமனை, கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்(மேல்நிலைக் கல்வி) கார்மேகம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின்படி, தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் தற்போது 18 பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்தபின் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். எஸ்.எஸ்.ஏ., போல ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 9, 10 ஆகிய வகுப்புகளில் செயல்படுத்தப்படும்.
எட்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் 9, 10 வகுப்புகளை பூர்த்தி செய்வது இத்திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படும். பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து பள்ளி மாணவருக்கும் அனைத்து திறனும் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதற்காக தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தண்ணீர், கழிப்பறை வசதிகள் வழங்கி மேம்படுத்தப்படவுள்ளன. பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையிலான துõரம் காரணமாக, படிப்பை தொடர முடியாமல் உள்ள பெண் குழந்தைகளுக்கென இலவச உணவுடன் ஹாஸ்டல் கட்டித்தரப்படவுள்ளது.
இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் 10 லட்ச ரூபாய் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும். மத்திய அரசு வழங்கும் மூன்று கோடி ரூபாயுடன், மாநில அரசு வழங்கும் ஒரு கோடி ரூபாய் சேர்த்து, மொத்தம் நான்கு கோடி ரூபாய் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த, மாவட்ட, பள்ளிகள் அளவில் விரைவில் ‘பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு’ அமைக்கப்படும். எஸ்.எஸ்.ஏ., இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசின் பாராட்டை பெற்றது போல், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தையும் அந்தந்த சிறப்பாக செயல்படுத்தி, மாநில அரசுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு, கார்மேகம் பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இளங்கோ, கோவை மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷிணி, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், ஆர்.எம்.எஸ்.ஏ., மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பாரதிய வித்யா பவன் பள்ளி முதல்வர் குமுதிணி ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மூன்று ‘மாதிரி பள்ளிகள்’
நிருபர்களிடம் கார்மேகம் கூறுகையில், “இத்திட்டத்தின்படி, முதல் கட்டமாக படிப்பில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இதே போன்ற பள்ளிகள் துவக்கப்படவுள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல் தரமான கல்விக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இப்பள்ளிகள் இருக்கும்.
திருப்பூர் மாவட்டம் மூலனுõர், அவினாசி ரோட்டில் உள்ள நம்பியூர் மற்றும் குண்டடம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகளும் மூன்று ஹாஸ்டல்களும் கட்டப்படவுள்ளன. பள்ளிகள் கட்ட 3.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுõறு மாணவியர் தங்க 61.5 லட்சம் ரூபாய் செலவில் ஹாஸ்டல்கள் கட்டப்படவுள்ளன,” என்றார்.
Thats an inventive answer to an interesting question
|
by Guntur,India 2012-10-07 20:37:34 20:37:34 IST |