மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்தியச் சுடர் | Kalvimalar - News

மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்தியச் சுடர் ஆகஸ்ட் 17,2011,16:00 IST

எழுத்தின் அளவு :

மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பல உதவிகளை இந்தியச் சுடர் கல்வி அறக்கட்டளையின் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருநின்றவூரைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவியர் 370 பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம், மாணவர்களின் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

சென்னை ஐஐடியின் விரிவுரையாளராக உள்ள டாக்டர். சிதம்பரமும், இந்தியச் சுடரின் நிர்வாக இயக்குனருள் ஒருவரான பாலமணிகண்டன் அவர்களும் இக்கருத்தரங்கில் மாணவர்களுக்கு பல பயனுள்ள தவல்களை அளித்தனர்.

பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைத் தவிர, சாதனை புரியும் பல படிப்புகள் உள்ளன என்று மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கின் நிறைவில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

2004ம் ஆண்டு இந்தியச் சுடர் அமைப்பு உருவானது. கல்வி கற்கும் மாணவர்களுக்கும், கல்வி கற்க இயலாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கும் உதவும் வகையில் இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது. உதவி பெறவும், உதவி செய்யவும் இவர்களது http://www.indiasudar.org  இணையதளத்தை பாருங்கள். மேலும் விவரங்கள் அறிய 98841 53800 தொலைபேசி எண்ணில் அழையுங்கள். 

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us