படிப்பை தேர்வு செய்வது எப்படி? | Kalvimalar - News

படிப்பை தேர்வு செய்வது எப்படி?-16-06-2011

எழுத்தின் அளவு :

எந்த தொழில்நுட்பம் தற்போது சிறப்பாக உள்ளது. வேலைவாய்ப்பு எந்த துறைக்கு  நன்றாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதை அடுத்து ஐந்து  ஆண்டுக்கு பின் உள்ள நிலைமையை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

படித்த பின்னர் மாணவர் வேலைக்குப் போகப் போகிறாரா, ஆராய்ச்சி செய்யப் போகிறாரா அல்லது ஆசிரியர் பணிக்கு வரப்போகிறாரா என்பதை அறிந்து முடிவு செய்ய  வேண்டும். தொழிற்சாலை பணிக்குச் செல்ல வேண்டுமானால் அதற்கேற்ப உங்கள்  படிப்பு அமைய வேண்டும். அது தொடர்பாக மாணவருக்கு விழிப்புணர்வு இருக்கி றதா என்பதை பார்க்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால், ஆராய்ச்சி  தொடர்பான படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். இதை மாணவரும் பெற்றோ ரும் சேர்ந்துதான் முடிவு செய்ய வேண்டும்.

இயற்பியலில் ஈடுபாடு உள்ள மாணவர் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பாடங்களை தேர்வு செய்யலாம். வேதியலில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் மெட்டீரியல் சயின்ஸ் தொடர்பான பாடங்களை எடுக்கலாம். இதையெல்லாம் நன்றாக  யோசித்துத்தான் முடிவு செய்ய வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்த பின்னர்,  கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணம் இருக்குமே தவிர, இதுபோன்ற விஷயங்களை பரிசீலிக்க அங்கு நேரம் இருக்காது.

பக்கத்து வீட்டுக்காரர் இந்த படிப்பை தேர்வு செய்தார். நானும் இந்த  பிரிவை தேர்வு செய்யப் போகிறேன் என்ற மனப்பாங்கின் அடிப்படையில் தேர்வு  செய்யக் கூடாது. மாணவரால் படிக்க முடியுமா அவருக்கு அந்த திறன் இருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.

பொதுவாக பெற்றோர்கள் சிலர் தாங்கள் விரும்புவதைத்தான் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். சென்னை உள்ளிட்ட பெரிய நகர்ப்புறப் பெற்றோர்களைப்  பொறுத்த வரையில் மாணவருக்கு எல்லாம் தெரியும். அவரே முடிவு செய்யட்டும் என்று நினைக்கிறார்கள். இந்த இரண்டும் இல்லாமல் மாணவர் பெற்றோர் இணைந்து படிப்பு தேர்வு பற்றி முடிவு செய்ய வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us