பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுங்கள் | Kalvimalar - News

பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுங்கள் -15-06-2011

எழுத்தின் அளவு :

பொறியியல் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கும் மாணவர்கள், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது, கல்லூரியை தேர்வு செய்வது என்பது குறித்து குழப்பத்தில் இருப்பார்கள். (help)

அவர்களுக்கு பெற்றோர் நிச்சயம் உதவ வேண்டும். எவ்வாறு என்றால், அவர்களுக்கு எதில் ஆர்வம், எதில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று பெற்றோருக்கும் தெரியும்.

எனவே, தங்களது பிள்ளைகளின் திறமைக்கு சரியாக இருக்கும் பொறியியல் படிப்பை தேர்வு செய்ய நிச்சயம் மாணவர்களுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

உங்களது நண்பர்களின் பிள்ளைகள் படிக்கும் பொறியியல் கல்லூரி பற்றி கேட்டறிந்து சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய உதவலாம்.

சில மாணவர்கள், நண்பர்கள் எடுக்கிறார்கள் என்று சில பாடப்பிரிவுகளை தேர்வு செய்வார்கள். ஆனால், அது தவறு. பிள்ளைகளுக்கு எது பிடிக்கும் என்ற விஷயத்தை எடுத்துச் சொல்லி உனக்கு சரியாக வரும் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதுதான் நல்லது. இது உனது எதிர்காலத்திற்கு அடிப்படை என்று புரிய வைக்க வேண்டும்.

சில பெற்றோர், இந்த பாடப்பிரிவைதான் எடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை வற்புறுத்துவார்கள். இது மாணவர்களது படிப்புத் திறனை குறைத்துவிடும். அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டலாமே தவிர, அவர்களை கையைப் பிடித்துக் கொண்டு உங்கள் வழியில் இழுத்துச் செல்லக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us