பி.டெக்., படிப்பை மேற்கொள்ள, பொதுவாக எவ்வளவு செலவாகிறது? | Kalvimalar - News

பி.டெக்., படிப்பை மேற்கொள்ள, பொதுவாக எவ்வளவு செலவாகிறது?-03-05-2013

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி.,களைப் பொறுத்தவரை, மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி, இளநிலை பொறியியல் படிப்பிற்கு, வருடாந்திர கட்டணம், ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும், வருடாவருடம் இந்த கட்டணம் உயர்த்தப்படும் சாத்தியமும் இருக்கிறது.

பிற கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, இளநிலை பொறியியல் படிப்பிற்கான கட்டணங்கள் வேறுபடுகின்றன. அரசு உதவிபெறாத கல்லூரிகளில், பி.டெக்., படிப்பதற்கான, 4 ஆண்டுகளின் சராசரி செலவு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையாகும். ஆனாலும், பல கல்லூரிகளில், பாதியளவு கூட இடங்கள் நிரம்பாத நிலை உள்ளதால், கடைசி நேரத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறக்க வேண்டாம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us