எந்தக் கல்லூரி தரமான பொறியியல் கல்வியை வழங்கும் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? | Kalvimalar - News

எந்தக் கல்லூரி தரமான பொறியியல் கல்வியை வழங்கும் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது?-03-05-2013

எழுத்தின் அளவு :

சிறப்பான உள்கட்டமைப்பு - ஒரு நல்ல கல்லூரிக்கு, சிறப்பான உள்கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம்.

ஆசிரியர்கள் - முறையான தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்களின் வெற்றிக்கு அடிப்படையானவர்கள்.

கல்வி நிறுவன நிலை - முறையான அங்கீகாரம் மற்றும் வழங்கப்படும் படிப்புகளுக்காக அங்கீகாரம் போன்றவை பெறப்பட்டிருக்க வேண்டும். வெறும் விளம்பரத்தை வைத்து நம்பாமல், அங்கே, எதுபோன்ற நிறுவனங்கள், வளாக நேர்முகத் தேர்வுக்கு வருகின்றன என்பதை பார்க்க வேண்டும்.

பாடத்திட்டம் - பாடத்திட்டமானது, தரமானதாகவும், காலத்திற்கு ஏற்றதாகவும், மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருவதாகவும் இருக்க வேண்டும்.

முன்னாள் மாணவர்கள் - அந்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள், இன்றைக்கு எந்த நிலையிலான பணிகளில் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் சமூக நிலை போன்ற அம்சங்களும் முக்கியம்.

எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் - படிப்புத் தவிர, இதர திறன் வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us