கவுன்சிலிங்கிற்கு தயாராக வருதல் என்றால் என்ன? | Kalvimalar - News

கவுன்சிலிங்கிற்கு தயாராக வருதல் என்றால் என்ன?-2011/06/17

எழுத்தின் அளவு :

தேவையான ஆவணங்களுடன் சரியான நேரத்தில் வருவது என்பதும் இதில் அடங்கினாலும், மனதளவில் தயாராகி வருவதையே இந்த வார்த்தைகள் முக்கியமாக குறிக்கின்றன. எந்த கல்லூரியில் படிக்கப் போகிறோம், என்ன பாடத்தை தேர்வுசெய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தெளிவாக திட்டமிட்டு, யார் குழப்பினாலும் குழம்பாதவாறு முடிவுசெய்து வர வேண்டும்.

கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு வந்து அதுபோன்ற விஷயங்களை முடிவுசெய்தல் என்பதைவிட, ஆபத்தான விஷயம் எதுவுமில்லை. குடும்பத்தோடு அமர்ந்து, பலர் வழங்கிய ஆலோசனைகளை விவாதித்து ஒரு திடமான முடிவெடுத்து தயாராக வர வேண்டும். கடைசி நேரத்தில் மாற்றம் செய்யக்கூடாது.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us