மாணவர்களின் கேள்விகள்... கல்வியாளர்களின் பதில்கள் | Kalvimalar - News

மாணவர்களின் கேள்விகள்... கல்வியாளர்களின் பதில்கள்-20-05-2013

எழுத்தின் அளவு :

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, அரசு தரும் சலுகை என்ன?

முதல் தலைமுறை பட்டதாரி என்றால், குடும்பத்தில் வேறு எவரும் பட்டதாரிகளாக இருக்கக் கூடாது. இவர்களுக்கு அரசு கல்வி கட்டணம் (டியூஷன் கட்டணம்) மட்டும் தரும்; நான்கு ஆண்டுகளுக்கு தலா 20 ஆயிரம் வீதம் கிடைக்கும்; மீதி நீங்கள் செலுத்த வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர் ஒதுக்கீடு எப்படி?

முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்க்கை தரப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவுக்கும் தனி விண்ணப்பம் தர வேண்டும். மொத்தம் 150 இடங்கள் ஒதுக்கீடு உள்ளது. கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தனியாக ஒதுக்கீடு உள்ளது; உரிய ஆவணங்களுடன் சென்னை அண்ணா பல்கலையில் நேரில் வந்து படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வில், எல்லா பாடப்பிரிவும் சேர்த்துக் கொள்ளப்படுமா?

எல்லா பாடப்பிரிவும் சேர்க்கப்படும்.

கவுன்சிலிங் விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்படுவது அவசியமா?

அனுப்பாமல் இருந்தாலும், பிரச்னை இல்லை.

சுயநிதி கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு?

சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீதம்; இதர கல்லூரிகளில் 35 சதவீதம். மதிப்பெண் தகுதி ஒரே போலதான்.

மெக்கட்ரானிக்ஸ் படித்தால் முதுகலை படிக்க முடியுமா?

எந்த பாடப்பிரிவுக்கும் முதுகலை படிப்பு இல்லாமல் இல்லை; வேறு பாடப்பிரிவில் கூட அப்டேட் செய்துகொள்ளலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us