கவுன்சிலிங் - பி.இ., பி.டெக்., இடங்கள் பற்றி அறியுங்கள் | Kalvimalar - News

கவுன்சிலிங் - பி.இ., பி.டெக்., இடங்கள் பற்றி அறியுங்கள்-03-05-2013

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் உள்ள பி.இ., மற்றும் பி.டெக்., இடங்கள்.

பல்கலைக்கழக துறைகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் செயல்படும் தமிழ்வழி துறைகளில் உள்ள பி.இ., இடங்கள்.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள மற்றும் சுயநிதி கல்லூரிகளால் ஒதுக்கப்பட்ட பி.இ., மற்றும் பி.டெக்., இடங்கள்.

இடங்களின் வகைகள்

வகை 1

அரசு பொறியியல் கல்லூரிகளிலுள்ள இடங்கள்

அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள உதவிபெறும் படிப்புகளில் உள்ள இடங்கள்.

காரைக்குடியிலுள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள(CECRI) இடங்கள்.

வகை 2

அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் பிரிவு படிப்புகளில் உள்ள இடங்கள்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்படும் இடங்கள்.

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(CIPET) உள்ள இடங்கள்.

இத்தனை வகையான இடங்கள் இருந்தாலும், விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஒரேயொரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது. சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டிற்கும், அதற்கான சிறப்பு ஒதுக்கீட்டு படிவத்தை, பிரதான படிவத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us