பொறியியல் படிப்பிற்கான ப்ராஜெக்ட் பணி என்பது கடினமானதா? | Kalvimalar - News

பொறியியல் படிப்பிற்கான ப்ராஜெக்ட் பணி என்பது கடினமானதா?-03-05-2013

எழுத்தின் அளவு :

பொறியியல் ப்ராஜெக்ட் பணிகள் கடினமானவை என்பது தவறான ஒரு கருத்து. பொதுவாக, நல்ல ப்ராஜெக்ட் பணிகளை, நல்ல கம்பெனிகளில் முடித்துவிட்டு வரும் மாணவர்களின் அனுபவங்கள் சிறப்பானவை. அதைப்பற்றி அவர்களே, சிலாகித்து சொல்கிறார்கள். பாடப்புத்தகங்கள் மற்றும் வகுப்பறை அனுபவங்களை மட்டுமே பெற்ற ஒரு மாணவருக்கு, ப்ராஜெக்ட் பணி அனுபவம் என்பது, நிஜ உலகை படம் பிடித்துக் காட்டுவதாய் அமைகிறது. இது ஒரு மாணவருக்கு பிரமிக்கத்தக்க அனுபவம்.

நல்ல ப்ராஜெக்ட்டுகள், சிறந்த ஜர்னல்களிலும் வெளியிடப்படுகின்றன. ப்ராஜெக்ட் அனுபவங்கள், ஒரு மாணவரின் எதிர்கால சாதனைகளுக்கு அடித்தளமாய் அமைகின்றன என்றே கூறலாம். சுருக்கமாக கூறுவதென்றால், ப்ராஜெக்ட் என்பது, நடைமுறை உலகை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறது. எனவே, அதை கடுமையானது என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us