ஆங்கில அறிவை சிறப்பாக வளர்த்துக்கொள்வது எப்படி? | Kalvimalar - News

ஆங்கில அறிவை சிறப்பாக வளர்த்துக்கொள்வது எப்படி?-03-05-2013

எழுத்தின் அளவு :

பல பொறியியல் கல்லூரிகள், தங்களின் பாடத்திட்டத்தில், ஆங்கிலத்திறன் வளர்ப்பு அம்சங்களை சேர்த்துள்ளன. மேலும், படிப்பின் ஒரு பகுதியாக, செமினார்களில் கலந்துகொள்ள மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். நேர்முகத்தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு போன்ற விஷயங்களில், மாணவர்களுக்கு பயிற்சியளிக்க, வேறு கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரும் முன்வருகிறார்கள்.

பல கல்லூரிகளில், ஆங்கிலத் திறன் பயிற்சியளிக்க, Language Labs அமைக்கப்பட்டுள்ளன. வெறும் மொழித்திறன் மட்டுமல்லாது, உடல் மொழி மற்றும் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us