எப்போதுமே பிரபலமாக உள்ள பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லதா அல்லது பொருத்தமான பிரிவை தேர்ந்தெடுப்பது நல்லதா? | Kalvimalar - News

எப்போதுமே பிரபலமாக உள்ள பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லதா அல்லது பொருத்தமான பிரிவை தேர்ந்தெடுப்பது நல்லதா?-03-05-2013

எழுத்தின் அளவு :

பொதுவாக, மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளே, மாணவர்களுக்கு பரிச்சயமான பாரம்பரிய பிரிவுகள். இவைத்தவிர, ஏராளமான பல பிரிவுகளும் உள்ளன. அதேசமயத்தில், நாம் எந்தக் கல்லூரியில் சேர்கிறோம் என்பதும் மிக முக்கியம். நல்ல நிறுவனங்கள், நேர்முகத் தேர்விற்கு வரும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். ஏனெனில், பல கல்லூரிகளில் படிப்பதே வீண், என்ற நிலை உள்ளது.

ஒருவருக்கு எந்தத் துறையில் விருப்பமுள்ளது மற்றும் எதில் ஒருவர் சாதிக்க முடியும் என்பதை ஆராய்ந்து, தகுதியான நபர்களிடம் ஆலோசனைப் பெற்று முடிவு செய்ய வேண்டும்.

ஒரு மாணவர், அடிப்படை பொறியியலுக்கும், பொறியியல் பயன்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும். சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல் போன்ற அடிப்படை அறிவியல் இன்ஜினியரிங் படிப்புகளில், அறிவியலின் அடிப்படை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அட்வான்ஸ்டு படிப்புகளில், பொறியியலின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, மாணவர்கள், தங்களின் ஆர்வம் மற்றும் திறனை அறிந்து, அதற்கேற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us