பொறியியல் நுழைவுத்தேர்வுக்கு ஒருவர் தயாராக வேண்டுமெனில், சராசரியாக எவ்வளவு காலம் அவர், அதற்காக எடுத்துக்கொள்ள வேண்டும்? | Kalvimalar - News

பொறியியல் நுழைவுத்தேர்வுக்கு ஒருவர் தயாராக வேண்டுமெனில், சராசரியாக எவ்வளவு காலம் அவர், அதற்காக எடுத்துக்கொள்ள வேண்டும்?-03-05-2013

எழுத்தின் அளவு :

ஒரு தனிப்பட்ட மாணவரின், தயாராதல் முறையைப் பொறுத்தது இது. ஆரம்ப நிலையிலிருந்து ஒருவர் தனது பணியை தொடங்கினால், ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணிநேரங்கள் வரை படிக்க வேண்டியிருக்கும். ஆனால், மேம்பட்ட நிலையில் தொடங்கினால், 3 முதல் 4 மணிநேரங்கள் போதுமானது.

ஒருவர் தனது 11 மற்றும் 12ம் வகுப்பிலிருந்து தயாராதல் பணியைத் துவங்கினால், 4 முதல் 6 மணிநேரங்கள் வரை தேவைப்படும். அதுவே, வார இறுதி நாட்களில், 8 மணிநேரம் வரை நீளலாம். ஆனால், அதேசமயம், திருப்புதல்(revision) மிகவும் முக்கியம். பொதுவாக, படித்தல் என்பதில், நேரத்தை மட்டுமே கணக்கிட முடியாது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்தளவிற்கு தரமாக படிக்கிறோம் என்பதே முக்கியம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us