கோச்சிங் வகுப்புகளால் நிகழும் எதிர்மறை விளைவுகள் என்ன? | Kalvimalar - News

கோச்சிங் வகுப்புகளால் நிகழும் எதிர்மறை விளைவுகள் என்ன?-03-05-2013

எழுத்தின் அளவு :

மாணவர்கள் கோச்சிங் வகுப்புகளில் கலந்துகொள்வதைப் பற்றி, ஆசிரியர்கள் எதிர்மறை கருத்துக்களையே தெரிவிக்கின்றனர். நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக, கோச்சிங் வகுப்புகளில் சேரும் மாணவர்கள், பிரச்சினை தீர்க்கும் திறனைத்தான் வளர்த்துக் கொள்கிறார்களே தவிர, ஒரு சிக்கலின் அடிப்படையைப் புரிந்து கொள்வதில்லை.

இதனால், உண்மையான திறனை சோதித்து, மாணவர்களை தேர்வுசெய்யும் உயர்கல்வி நிறுவனங்களின் நோக்கம் நிறைவேறுவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் வகுப்புகளால், மாணவர்களின் உள்ளார்ந்த கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. நுழைவுத்தேர்வை வெல்ல உதவும் அந்த பயிற்சி வகுப்புகள், ஒரு நல்ல இன்ஜினியராக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் மனப்பாங்கை மாணவர்களிடம் ஏற்படுத்துவதில்லை என்று பல்வேறான கருத்துக்களை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us