கவுன்சிலிங் செயல்பாடு என்பது என்ன? | Kalvimalar - News

கவுன்சிலிங் செயல்பாடு என்பது என்ன?-03-05-2013

எழுத்தின் அளவு :

பள்ளி மேல்நிலைத்தேர்வு முடிவுகள் வெளியான பின்பாக, நீங்கள் எந்த பொறியியல் கல்லூரியில் மற்றும் எந்தப் பிரிவில் சேரவுள்ளீர்கள் என்பதை முடிவு செய்யும் இறுதி செயல்பாடுதான் கவுன்சிலிங். இதில் சில மாற்றங்களுக்கு வாய்ப்பிருந்தாலும், அவை நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

ரேங்க் நிலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, நூற்றுக்கணக்கான சாதாரண கல்லூரிகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்கையில், பல தவறுகள் நேர வாய்ப்புகள் உள்ளன.

பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருவதால், உங்களுக்கு பொறியியல் இடம் கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது, உங்களின் மதிப்பெண்ணைப் பொறுத்தே அமையும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us