எத்தனை வகையான உதவித்தொகைகள் கிடைக்கின்றன? | Kalvimalar - News

எத்தனை வகையான உதவித்தொகைகள் கிடைக்கின்றன?-03-05-2013

எழுத்தின் அளவு :

திறந்தநிலை மெரிட் உதவித்தொகைகள் - இது முழு அளவிலோ அல்லது பகுதியளவிலோ, உங்களின் ஒட்டுமொத்த கல்வி செலவுக்குமான ஒரு கவுரவம் வாய்ந்த உதவித்தொகையாகும்.

கல்வி நிறுவனத்தின் மெரிட் உதவித்தொகைகள் - இது கல்வி நிறுவனங்களைப் பொறுத்தது. உங்களின் வாரியத் தேர்வு செயல்பாட்டின் அடிப்படையிலோ அல்லது முந்தைய ஆண்டு தேர்வுகளில் உங்களின் செயல்பாட்டு அடிப்படையிலோ உங்களின் மெரிட் மதிப்பிடப்படலாம்.

மெரிட் மற்றும் தேவை அடிப்படையிலான உதவித்தொகைகள் - ஒரு மாணவரின் மெரிட் மற்றும் அவரின் பொருளாதார தேவைகளின் அடிப்படையிலான உதவித்தொகையாகும் இது.

படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் - ஜுனியர் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி உதவி நடவடிக்கைளில் ஈடுபடுதல் போன்ற வாய்ப்புகளை சில கல்வி நிறுவனங்கள் வழங்கி, இதன்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

மெரிட் விருதுகள் - குறிப்பாக, இரண்டாம் ஆண்டு முதல், மாணவர்களுக்கு இந்த லாபகரமான விருதுகள் வழங்கப்படுகின்றன.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us