பொறியியல் துறை பெண்களுக்கு எந்தளவு ஏற்றது? | Kalvimalar - News

பொறியியல் துறை பெண்களுக்கு எந்தளவு ஏற்றது?-30-04-2013

எழுத்தின் அளவு :

பொறியியல் துறை பெண்களுக்கு நன்றாக ஒத்துவரக்கூடிய சிறப்பான துறைதான். பொதுவாக, ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் போன்ற துறைகள், பெண்களுக்கு ஒத்துவராது என்ற ஒரு கருத்து பரவலாக உள்ளது. இந்த துறைகளில் பணிபுரிய, அதிகளவு உடலாற்றல் தேவைப்படும் என்பது உண்மையே.

அந்த உடலாற்றலைப் பெற்ற ஆணோ, பெண்ணோ, தங்களின் பாலினத்தைப் பற்றிய கவலையின்றி, அந்தப் பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம். உத்ரகாண்ட் தொழில்நுட்ப பல்கலையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் படிக்கும் மாணவிகள், மாணவர்களைவிட, மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் என்கிற தகவல், இந்தப் பிரிவுகள் உள்ளிட்ட, பொறியியலின் இதரப் பிரிவுகளை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம் என்பதே உண்மை. எனவே, உடல்தகுதிதான் முக்கியமே தவிர, பாலினம் ஒரு பிரச்சினையல்ல. ஆனால், சுரங்கத் துறை பொறியியல் படிப்பில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us