இன்ஜி., மாணவர் சேர்க்கை82 ஆயிரமாக உயர்வு | Kalvimalar - News

இன்ஜி., மாணவர் சேர்க்கை82 ஆயிரமாக உயர்வு-31-08-2018

எழுத்தின் அளவு :

சென்னை,: துணை கவுன்சிலிங் முடிந்த நிலையில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை, 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சிலிங் நடத்தப்பட்டது. தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி கவுன்சிலிங்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' முறையிலான கவுன்சிலிங்கும் நடந்தது.முதற்கட்ட பொது கவுன்சிலிங்கின் முடிவில், 74 ஆயிரம் பேர் இடங்கள் பெற்று, இன்ஜி., படிப்பில் சேர்ந்திருந்தனர். பின், துணை கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதையடுத்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கான இடங்களின் இறுதி பட்டியலை, மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: மொத்தமுள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளின், 1.77 லட்சம் இடங்களுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு, 1.59 லட்சத்து, 631 பேரும்; துணை கவுன்சிலிங்குக்கு, 9,737 பேரும் என, மொத்தம், 1.69 லட்சத்து, 368 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.அவர்களில், 1.15 லட்சம் பேர், கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றிருந்தாலும், 82 ஆயிரத்து, 249 பேர் தான் இடங்கள் பெற்றுள்ளனர்.

விளையாட்டுப் பிரிவு, 421; மாற்றுத் திறனாளி, 117; முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், 120; தொழிற்கல்வி, 1,510; அருந்ததியர் இடங்களில், தலித் பிரிவினருக்கான ஒதுக்கீடு, 118 மற்றும் பொதுப் பிரிவில், 79 ஆயிரத்து, 963 பேரும், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர்.இதையடுத்து, 94 ஆயிரத்து, 868 இடங்கள் காலியாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us