டி.என்.இ.ஏ: ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் குழப்பமா? | Kalvimalar - News

டி.என்.இ.ஏ: ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் குழப்பமா?-09-05-2018

எழுத்தின் அளவு :

2018ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்களின் மாணவர் சேர்க்கை முழுமையாக இணைய வழி விண்ணப்ப பதிவில் துவங்கி இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் நடைபெறவுள்ளது.

தகவல்களைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல், தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகிய அனைத்தையுமே இணைய வழியிலேயே செய்யலாம். சான்றிதழ்கள் சரிபார்ப்பதற்கு மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.

இணையவழி கலந்தாய்வுக்கான வழிமுறைகள்:

 • முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu வலைத்தளத்திற்குச் சென்று அதில் டி.என்.இ.ஏ 2018 என்பதைத் தேர்வு செய்ய வேண்டும், அல்லது நேரடியாக www.tnea.ac.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
 • தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிஷன் 2018 என்கிற தலைப்பில் வலைப் பக்கம் வரும் அதில் ‘கிலிக் ஹியர் டொ நியூ ரெஜிஸ்ட்ரேஷன் பார் டி.என்.இ.ஏ 2018’ என்பதைத் தேர்வு செய்யவும். அதில் ‘ரெஜிஸ்ட்ரேஷன்’ என்ற பகுதி தற்போது செய்ய வேண்டிய செயல் என்பதை ஆரஞ்சு நிறத்தில் காட்டும்.

 

1.விண்ணப்பப் பதிவு:

 • அந்தப் பதிவு கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.

  1. பயனாளர் பதிவுக்கான விவரங்கள் பதிவிடல்
  2. தகுதி விவரங்கள் பதிவிடல்
  3. விண்ணப்பதாரரின் சொந்த விவரங்களைப் பதிவிடல்
  4. சிறப்பு ஒதுக்கீடு விவரங்களைத் தருதல்

 • அனைத்து விபரங்களையும் எந்தவொரு பிழையும் இல்லாமல் ‘டிராப் டவுன் மெனு’ வைப் பயன் படுத்திச் சரியாக பதிவு செய்யவும்.
 • விபரங்களைப் பதிவு செய்யும் போது கீழ்க்கண்ட விபரங்களை மனதில் கொள்ளவும்:

  1. உங்கள் பெயரை, உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளது போல பதியவும்
  2. பயனாளர் பெயர் என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லாவிட்டால் புதிதாக ஒன்றை உருவாக்கிப் பின் அதைப் பதிவு செய்யவும். மின்னஞ்சல் முகவரி உருவாக்குவதில் சிரமம் இருந்தால் உங்கள் பெற்றோரின் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். இந்த மின்னஞ்சல் முகவரியே உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியாகக் கருதப்படும். இதன் மூலமாகவே எல்லாத் தகவல்களும் உங்களுக்கு அனுப்பப் படும்.
  3. கொடுக்கப்பட்ட செல் பேசி எண்ணும் பதிவு செய்யப்பட்ட செல் பேசி எண்ணாகவே கருதப்படும். இதன் மூலமாகவே எல்லா குறுந்தகவல்களும் அனுப்பப்படும்.
  4. இங்குக் கொடுக்கப்பட்ட விபரங்களைப் பின்னர் மாற்ற இயலாது, எனவே உறுதி செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை சரி பார்ப்பது நல்லது.

 • இந்த விபரங்களை முடித்த பின் ‘செண்ட் வெரிபிகேஷன் ஓ.டி.பி’ என்ற பட்டனை தேர்வு செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட செல் பேசி எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் எண் வரும்.
 • ‘ஓகே’ என்பதை கிளிக் செய்த பிறகு ‘வெரிபிகேஷன் ஓ.டி.பி’ என்கிற இடத்தில் வந்த ஓ.டி.பி எண்ணைப் பதிவு செய்த பின் ‘ரெஜிஸ்டர்’ என்பதை கிளிக் செய்யவும்.
 • ‘யூசர் ரெஜிஸ்ட்ரேஷன் பிரிவியூ’ என்கிற தலைப்பில் இதுவரை நீங்கள் பதிவு செய்த அனைத்து விபரங்களும் சரிபார்த்துக் கொள்ளும் வகையில் திரையில் தோன்றும்.
 • விபரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் ‘கன்பார்ம்’ என்று பதிவு செய்யவும். ஏதேனும் பிழை இருந்தால் அதைத் திருத்த ‘கேன்சல்’ என்பதை கிளிக் செய்தால் பழைய நிலைக்குச் சென்றுவிடும். மீண்டும் வேண்டிய மாற்றங்களைச் செய்த பிறகு ‘கன்பார்ம்’ என்று பதிவு செய்யவும். கடைசியாக ‘ஓகே’ என்பதை கிளிக் செய்தால் ‘யூசர் கிரியேட்டட் சக்ஸஸ்புல்லி’ என்கிற தகவல் உங்கள் திரையில் தோன்றும்.
 • இதில் ‘ஓகே’ என்பதை கிளிக் செய்யவும். இனி நீங்கள் எப்போது வேண்டுமாயினும் டி.என்.இ.ஏ இணைய தளத்தில் உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையலாம்.
 • ‘லாக் இன்’ செய்யும் போது கூடுதலாக அதில் தோன்றும் ஐந்து இலக்கு எண்ணை ‘காப்ட்சா’ என்கிற இடத்தில் பதிவிட வேண்டும்.

2. விண்ணப்ப பதிவிற்கு பணம் செலுத்துதல்:

 • மேற் சொன்னபடி லாக் இன் செய்து டி.என்.இ.ஏ தளத்திற்குச் சென்றால் ‘பேமெண்ட்’ என்கிற ஆரஞ்சு நிறத்திலும், முடித்துவிட்ட பணியான ‘ரெஜிஸ்ட்ரேஷன்’ பச்சை நிறத்திலும் இருக்கும்.
 • இதில் நீங்கள் கொடுத்த தகவலின்படி (பதிவு கட்டணத் தொகை மற்றும் தனி இட ஒதுக்கீடு கட்டணத் தொகை) எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதைக் காட்டும். இந்தத் தொகையை டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலம் வங்கிக் கணக்கின் வாயிலாகச் செலுத்தலாம். இதைச் செய்வதற்கு ‘அக்ரீ அண்ட் பே நௌ’ என்பதை கிள்க் செய்யவும்.
 • பின்னர் வரும் ஏதாவது ஒரு ‘கேட் வே’ வை தேர்ந்தெடுத்தால் தொகை பெறும் வங்கியின் தொகை செலுத்தும் திரை வரும். தொகையைச் செலுத்தி முடித்தவுடன் உங்கள் செல்பேசிக்கு விண்ணப்ப எண்ணும், பரிவர்த்தனை ஐடியும் அனுப்பப்படும்.

 • ‘பேமெண்ட் சக்ஸஸ்புல்’ என்கிற தகவல் உங்கள் திரையில் தோன்றிய பின் ‘செண்ட் ரிசிப்ட்’ என்பதை கிளிக் செய்து உங்கள் ரசீதை உங்கள் மின்னஞ்சலில் பெற்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3. தனிப்பட்ட தகவல்கள்:

 • மூன்றாவதாக மாணவரின் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கப்படும் மூன்று பிரிவுகளாக பதிவு செய்ய வேண்டும்.

  1. தன்னைப்பற்றிய தகவல்கள்
  2. கல்வி உதவித் தொகை வேண்டுமா என்ற தகவல்கள்
  3. சமூகத் தகவல்கள்

 • முதல் பிரிவில் மாணவர் பற்றிய விபரங்கள் (தந்தை பெயர், முகவரி, மின்னஞ்சல், பிறந்த நாள், ஆண்டு வருமானம் போன்ற தகவல்கள்) பதிவிட வேண்டும்.
 • இரண்டாவது பிரிவில் குடும்பத்தில் முதல் பட்டதாரி, கல்வி கட்டணச் சலுகை, கட்டண விலக்கு தொடர்பான விபரங்களைப் பதிவிட வேண்டும்.
 • மூன்றாவது பிரிவில் தாய் மொழி, பெற்றோரின் தொழில், பயிற்று மொழி போன்ற விபரங்களைப் பதிவிட வேண்டும்.
 • இறுதியாக ‘சேவ்’ என்பதை கிளிக் செய்தால் இதுவரை உள்ளிடப்பட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்படும். அவ்வாறு சேமித்தால் ‘பேர்ஸ்னல் டீடெயில்ஸ் சேவ் சக்ஸஸ்புல்லி’ என்கிற செய்தி திரையில் தோன்றும்.
 • ‘பேர்ஸ்னல் டீடெயில்ஸ் பிரிவியூ’ என்று கொடுக்கப்பட்ட தகவல்களைச் சரி பார்க்கும் விண்ணப்பம் தோன்றும். அதைச் சரி பார்த்த பிறகு ‘கன்பார்ம்’ என்று உள்ளீடு செய்து ‘ஓகே’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். மாற்றம் வேண்டுமாயின் ‘கேன்சல்’ என்பதை கிளிக் செய்து மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

4. கல்வித் தகவல்கள்:

 • ‘அகடாமிக் இன்பர்மேஷன்’ என்கிற கல்வி தகவல்களுக்கான கணினி திரை தோன்றும்.
 • இதில் நீங்கள் தமிழ் நாட்டில் படித்தீர்களா என்பதையும், எட்டாவது வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி, படித்த ஆண்டு என்ற விபரங்கள், மேல்நிலைத் தேர்வின் பதிவு எண், எழுதிய ஆண்டு, பெற்ற மதிப்பெண்கள் முதலியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
 • நீங்கள் 2018 தமிழ்நாடு எச்.எஸ்.சி மாணவராயின் உங்களுடைய மதிப்பெண் கல்வித் துறையிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளப்படும். இதை முடித்தபின் ‘சேவ்’ என்பதை கிளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம். பின்னர் தகவல்களை சரி பார்த்த பின்பு ‘கன்பார்ம்’, ‘ஓகே’ கொடுத்து அதைச் சேமிக்கவும்.
 • இந்தப் படி நிலைகளை எல்லாம் சரியாக முடித்தால் ‘வியூ’ என்பதை கிளிக் செய்தால் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப எண், பேமெண்ட் ஸ்டேட்டஸ் மற்றும் அப்லிகேஷன் ஸ்டேட்டஸ் ஆகிய விபரங்கள் திரையில் தோன்றும்.
 • பின்னர் ‘புரொசீட் டூ வியூ யுவர் அப்லிகேஷன்’ என்பதை கிளிக் செய்தால் விண்ணப்ப நகல் உங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
 • இப்போது லாக் அவுட் செய்து வெளி வந்து விடலாம். திரும்பவும் லாக் இன் செய்தால் இதுவரை நீங்கள் பதிவு செய்த அனைத்துத் தகவல்களும் திரையில் தோன்றும். இப்போது ‘டவுன்லோட் அப்லிகேஷன்’ என்பதை கிளிக் செய்தால் உங்கள் முழு விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யப்படும்.

தொழிற்கல்வி மாணவர்கள்:

 • நீங்கள் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் பதிவு செய்திருந்தால் அதன் மதிப்பெண்களைப் பதிவு செய்ய ‘அகாடமிக்’ என்கிற பகுதி இருக்கும். அதில் உங்கள் மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும்.
 • மதிப்பெண் பதிவு செய்வதைத் தவிர மற்ற எல்லாமே முன்னர் கூறப்பட்டபடியே செய்ய வேண்டும்.
 • பின்னர் தரவரிசை பட்டியலுக்காகவும் உங்கள் விருப்பக் கல்லூரி மற்றும் பாடத்தை பதிவு செய்யவும் தகவலை எதிர் பார்க்கவும்.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us