அண்ணா பல்கலையின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, இன்போசிஸ் நிறுவனம் மூலம் பயிற்சி தரப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தம், நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில், இன்போசிஸ் கல்வி மற்றும் பயிற்சி துறை துணை தலைவர் பி.சுரேஷ், அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் மற்றும் அண்ணா பல்கலை தொழில் நிறுவன கூட்டு மையத்தின் இயக்குனர் தியாகராஜன் பங்கேற்றனர்.
இந்த
ஒப்பந்தப்படி, இரண்டு
ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலையின், மூன்று பிரிவு
கல்லுாரிகள்; 13 உறுப்பு
கல்லுாரிகள் மற்றும், 10 அரசு இன்ஜி.,
கல்லுாரி மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு, இன்போசிஸ்
அதிகாரிகள், தொழில்நுட்ப
வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர்.
இன்போசிஸ் நடத்தும் போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியும்; இன்போசிஸ் வளாகங்களை மாணவர்கள் பார்வையிடலாம்.