சென்னை: அண்ணா பல்கலை.,க்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புக்கள் சமீபத்தில் துவங்கின.
புதிதாக வந்த மாணவர்களுக்கு பேராசிரியர்கள், விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலை., விதித்துள்ளது.
இதன்படி, மாணவ - மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கூடாது. வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கல்லூரிகளுக்கு ஓட்டி வரக் கூடாது.
மாணவிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட், லெக்கின்ஸ், த்ரீ போர்த் போன்ற ஆடைகளை கல்லூரிக்கு அணிந்து வரக் கூடாது. கல்லூரி வளாகத்திற்குள் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே நின்று பேசக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.