எப்படி நடக்கிறது இன்ஜினியரிங் கவுன்சிலிங்? | Kalvimalar - News

எப்படி நடக்கிறது இன்ஜினியரிங் கவுன்சிலிங்?-08-07-2016

எழுத்தின் அளவு :

* கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் ‘கால் லெட்டர்’ அனுப்பப்படுகிறது.

* தங்களின் அழைப்புக் கடிதத்தை(கால் லெட்டர்) சமர்ப்பித்த பின்னர், கவுன்சிலிங் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயை (எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ஆயிரம் ரூபாய் மட்டும்),  வங்கி கவுன்டரில் செலுத்தி, அதற்கான வங்கி ரசீது அல்லது சலானை பெற வேண்டும்.

* தங்களுக்கான கவுன்சிலிங் தொடங்குவதற்கு சுமார் 2 மணி நேரங்கள் முன்னதாகவே பணத்தை செலுத்தி விடுவது நல்லது. அதன்மூலம், கடைசி நேர நெரிசல், பதற்றத்தை தவிர்க்கலாம். பணத்தைப் பெற்றுக்கொண்டு வங்கி அளிக்கும் சலான், குறிப்பிட்ட கவுன்சிலிங் செஷனில், சம்பந்தப்பட்ட மாணவரின் ரேங்கிங் மற்றும் இதர விபரங்களைக் கொண்டிருக்கும்.

* கவுன்சிலிங்கில், ஒரு நபருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், அவருடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அப்போது வங்கி சலானையும் வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விளக்கமளிக்கும் ஹாலில் நுழைந்தவுடன், மாணவரின் வருகை பதியப்படும்.

* அதன்பிறகு, கொண்டு வந்திருக்கும் சான்றிதழ்களை எவ்வாறு வரிசைப்படுத்தி, சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டிய இதர விதிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு சுருக்கமான வழிகாட்டுதல் தரப்படும்.

* அதனையடுத்து, அசல் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் சரிபார்க்கப்படும். ஒருவரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அசலாக இல்லை அல்லது ஏதேனும் முறைகேடுகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். வெற்றிகரமாக சரிபார்ப்பை முடித்த மாணவர், கவுன்சிலிங் ஹாலுக்குள் அனுமதிக்கப்படுவார்.

* கவுன்சிலிங் நிறைவுக்கு முன்னதாக, செஷன் ரேங்க் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். காலியாக இருக்கும் இருக்கைகளில், தாங்கள் விரும்பும் இருக்கையில் மாணவர் அமரலாம்.

* ரேங்க் அடிப்படையில், விருப்பங்கள் உறுதி செய்யப்படும். ஒரு மாணவர், கல்லூரி அல்லது பாடப்பிரிவு என்ற வகையில், குறைந்தபட்சம் 5 முதல் 10 விருப்பங்கள் வரை முன்பே ஆராய்ந்துசெல்வது நல்லது.

ஒரு மாணவர், குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்வுசெய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து வந்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்த கல்லூரியோ அல்லது பாடப்பிரிவோ, அவரை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களால் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டு, இடம் இல்லாமல் போகலாம். எனவே, ஒவ்வொரு கவுன்சிலிங் செஷன் முடிந்த பின்னரும், அண்ணா பல்கலைக்கழக வலைதளத்தில் இடப்படும் விபரங்களைப் பார்த்து, முன்பே தெளிவாக இருப்பது நல்லது.

* தனக்கான குறிப்பிட்ட கவுன்சிலிங் நாளில் மற்றும் செஷனில், தனது விருப்ப பாடப்பிரிவோ அல்லது கல்லூரியோ ஒரு மாணவருக்கு கிடைக்கவில்லை எனில், அப்போது உள்ள காலியிடங்களில், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வுசெய்ய வேண்டும்.

* தனக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்த பின்னர், கொடுக்கப்படும் ஒதுக்கீட்டு கடிதத்தை, குறிப்பிடப்பட்ட கடைசித்தேதி முடியும் முன்னர், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கொடுத்து, சேர்க்கை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us