இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; 91 ஆயிரம் இடங்கள் காலி | Kalvimalar - News

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; 91 ஆயிரம் இடங்கள் காலி-29-07-2015

எழுத்தின் அளவு :

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான அண்ணா பல்கலையின் பொது கவுன்சிலிங், நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை, ஒரு லட்சத்து ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன; இன்னும், 91 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

ஜூலை, 1ம் தேதி அண்ணா பல்கலையில் துவங்கிய, பி.இ., - பி.டெக்.,படிப்புக்கான பொது கவுன்சிலிங், நேற்றுடன் முடிந்தது. ஒரு லட்சத்து, 1,620 இடங்கள் நிரம்பியுள்ளன. பொது கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்ற,ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 794 பேரில், 46,571 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.

603 பேர் இடம் கிடைத்தும், தங்கள் விரும்பிய பாடப்பிரிவு மற்றும் கல்லூரி கிடைக்காததால், இடங்களை திருப்பிக் கொடுத்தனர். தற்போதைய நிலையில், 91 ஆயிரத்து, 473இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, நான்கு கல்லூரிகளில், 824; தனியார் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளில், 90 ஆயிரத்து, 649 இடங்கள் காலியாக உள்ளன.

அரசு இன்ஜி., கல்லூரிகளில் இடம் காலி இல்லை. தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங், இன்றும்,நாளையும் நடக்கிறது. 3,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us