சென்னை: ஜூலை 1ம் தேதி முதல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்கும் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் ராஜாராம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 28ம் தேதியும், மாற்று திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 29ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூன் 19ம் தேதி ரேங்க் பட்டியலும், ஜூன் 15ம் தேதி ரேண்டம் எண்ணும் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.