பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு - 1,05,133 பேருக்கு ஒதுக்கீடு! | Kalvimalar - News

பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு - 1,05,133 பேருக்கு ஒதுக்கீடு!-05-08-2014

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் பொது கவுன்சிலிங், ஆகஸ்ட் 4ம் தேதியுடன் முடிந்தது. மொத்தம் 1,05,133 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

28 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,929 பேர். அவர்களில் 59,300 பேர் வரவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 496 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 35.95%.

இறுதிநாளில் 5,516 பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் பாதிக்கும்மேல், அதாவது, 2,964 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 55 பேர்.

இறுதியாக, 2,497 பேர் ஒதுக்கீடு பெற்றனர். கடைசி நாளின் ஆப்சென்ட் விகிதம், மற்ற 27 நாட்களையும்விட, மிக அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய ஆப்சென்ட் விகிதம் 53.73% ஆகும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us