இறுதிகட்டத்தில் பொறியியல் கவுன்சிலிங் - இதுவரை 1,02,636 பேர் ஒதுக்கீடு பெற்றனர் | Kalvimalar - News

இறுதிகட்டத்தில் பொறியியல் கவுன்சிலிங் - இதுவரை 1,02,636 பேர் ஒதுக்கீடு பெற்றனர்-04-08-2014

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலை நடத்தும் பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் நிறைவு கட்டத்திற்கு வந்துள்ளது. 27 நாட்கள் முடிவில் 1,02,636 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இத்தனை நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,413 பேர். அவர்களில் ஆப்சென்ட் ஆனவர்கள் 56,336 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 441 பேர்.

யாரும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 35.34% என்பதாக உள்ளது. 27வது நாளில் 6,798 பேர் அழைக்கப்பட்டனர்.

அவர்களில், 3,409 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 34 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 50.15% ஐ தாண்டியது.

பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிய ஆகஸ்ட் 4ம் தேதியே கடைசி நாள். எனவே, ஆப்சென்ட விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us