சென்னை: பொறியியல் படிப்பில், அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் ஏற்கனவே விண்ணப்பித்திருக்கும் தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களுடன், ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், தங்களின் வருகையைப் பதிவுசெய்த பின்னர், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
ஏற்கனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள், விரும்பினால், தங்களின் அசல் ஒதுக்கீட்டு ஆணையுடன் பதிவுசெய்து, கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் வரும்போது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்
ஒதுக்கீட்டு ஆணை (ஏற்கனவே பெற்றிருந்தால்)
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
மாற்றுச் சான்றிதழ்(TC)
நிரந்தர சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ் (தேவைப்படுவோர்)
முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் மற்றும் உறுதியளிப்பு படிவம்
முன்வைப்புத் தொகை ரூ.1000
NATA ஹால்டிக்கெட் அல்லது NATA மதிப்பெண் பட்டியல் (பி.ஆர்க். சேருபவர்களுக்கு).