சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கின் 23 நாட்கள் முடிவில், 86,031 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
இதுவரை அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,858 பேர். அவர்களில், வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 41,485 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 342 பேர்.
இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 32.45% என்பதாக உள்ளது.
23வது நாளில் மட்டும், 8,832 பேர் அழைக்ப்பட்டனர். அவர்களில், 3,866 பேர் வரவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 18 பேர். இறுதியாக 4,948 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.
அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 43.77%. இதுவே இதுவரையான நாட்களில், அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமாகும். பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே, ஆப்சென்ட் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.