சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கின் 22 நாட்கள் நிறைவில், மொத்தம் 81,083 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
இதுவரை அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,026 பேர். அவர்களில் வராதவர்கள் 37,619 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 324 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்த ஆப்சென்ட் விதிகம் 31.61%. 22வது நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 6294 பேர். அவர்களில் வராதவர்கள் 2,609 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர்.
இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,672 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் மட்டும் 41.45% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலான நாட்களில், இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.