சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிங் துவங்கி, 21 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 31.06% என்ற அளவை எட்டியுள்ளது.
இந்த 21 நாட்களின் முடிவில், 112732 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில், 77411 பேர் ஒதுக்கீடு பெற்றனர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 311 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.
21வது நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 6360 பேர். அவர்களில், வராதவர்கள் 2597 பேர். இறுதியில் 3755 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.
அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 40.83%. இதுவரை கவுன்சிலிங் நடைபெற்றுள்ள நாட்களில், இந்த 21வது நாளில்தான் ஆப்சென்ட் விகிதம் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.