சென்னை: பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில், ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை 20,256 என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 27.37%.
பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 15 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்காக, இதுவரை 74,008 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 53,526 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 226. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.
15வது நாளில் மட்டும் 5,255 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1765. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 11 பேர்.
இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,479 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 33.59%. இந்த 15 நாட்களில், இதுவே அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமாகும்.