பொறியியல் ரேங்க் பட்டியல் - அகடமிக் பிரிவில் முக்கிய இடம் பெற்றவர்கள் | Kalvimalar - News

பொறியியல் ரேங்க் பட்டியல் - அகடமிக் பிரிவில் முக்கிய இடம் பெற்றவர்கள்-17-06-2014

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட பொறியியல் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில், அகடமிக் பிரிவில், எந்தெந்த மாணவர்கள், எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண்களுடன், முன்னணி இடம் பிடித்துள்ளனர் என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

BC பிரிவு

இந்தப் பிரிவில், சுந்தர் நடேஷ் எனும் மாணவர், 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர், சென்னையைச் சேர்ந்தவர்.

அதேபிரிவில், இரண்டாமிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், மிதுன் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் நாமக்கல்லை சேர்ந்தவர்.

அப்பிரிவில், மூன்றாமிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், ஹரீதா என்ற மாணவி பெற்றுள்ளார். இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.

MBC பிரிவு

இப்பிரிவில், முதலிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், அபிஷேன் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

அதேபிரிவில், இரண்டாமிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், ராமு என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்.

BCM பிரிவு

இப்பிரிவில், முதலிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், முகமது இசா என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் உதகமண்டலத்தை சேர்ந்தவர்.

SC பிரிவு

இப்பிரிவில், முதலிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், கீர்த்தனா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர்.

SCA பிரிவு

இப்பிரிவில், முதலிடத்தை, 199.75 கட்-ஆப் மதிப்பெண்களுடன், மது ருஷா என்ற மாணவி பெற்றுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

ST பிரிவு

இப்பிரிவில், முதலிடத்தை, 197.75 கட்-ஆப் மதிப்பெண்களுடன், தென்னரசு என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலூகாவைச் சேர்ந்தவர்.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us