அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பின | Kalvimalar - News

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பின-13-08-2013

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், அனைத்து இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன.

அதேசமயம், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் இதுவரை 838 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கிறது.

மாநிலத்தில் மொத்தம் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றோடு, மொத்தம் 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களை நிரப்புவதற்கும் இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடந்துவருகிறது.

இவற்றில், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் தவிர, அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 12ம் தேதியோடு முடிந்துவிட்டது. இதன்மூலம், அந்த கல்லூரிகளில் இருந்த அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

இந்நிலையில், தமிழகத்தின் 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் இன்னும் 838 இடங்கள் காலியாக உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான கலந்தாய்வு மட்டும் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us