பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை - காரணம் என்ன? | Kalvimalar - News

பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை - காரணம் என்ன?-01-08-2013

எழுத்தின் அளவு :

பொறியியல் கவுன்சிலிங் முடிந்து, ஏறக்குறைய 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், பல பொறியியல் கல்லூரிகளின் சில துறைகளில், ஒரு மாணவர்கூட சேராத பரிதாப நிலை உள்ளது.

மொத்தம் 5 கல்லூரிகளில், மெக்கானிக்கல் பிரிவை எடுக்க ஒரு மாணவர் கூட முன்வரவில்லை. அதேபோன்று 6 கல்லூரிகளில், சிவில் பிரிவை எடுக்க ஒருவரும் தயாராக இல்லை.

மேலும், 31 கல்லூரிகளில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவுக்கு ஒருவரும் வரவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை, 35 கல்லூரிகளில் சீந்த ஆளில்லை.

எலக்ட்ரிகல்ஸ் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை எடுக்க 37 கல்லூரிகள் பக்கம் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. இவைதவிர, இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவை, மொத்தம் 30 கல்லூரிகளில் ஒருவரும் தொடவில்லை.

பாடப்பிரிவை விட, சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்பதில் மாணவர்கள் கவனமாக இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மேலும், ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் தகுந்த வேலையின்றி தவிப்பதால், இந்தாண்டு அதிகளவிலான மாணவர்கள், கலை-அறிவியல் கல்லூரிகளின் பக்கம் போய்விட்டார்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக, கலந்தாய்வின் முடிவில் காலியிடங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், பல பொறியியல் கல்லூரிகள், மூடுவிழா காணும் நிலைக்கு வந்துள்ளன.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us