சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வின் 35 நாட்களின் முடிவில் 1,20,311 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். மொத்தமாக அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,78,664 பேர்.
இதுவரை 57,868 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 485. யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 32.39%.
35ம் நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,445. அவர்களில் வராதவர்கள் 2,203. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 22. ஒதுக்கீடு பெற்றவர்கள் 2,220 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 49.56%.
பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான துணை கலந்தாய்வும், தாழ்த்தப்பட்டோருக்கான விடுபட்ட இடங்களை நிரப்பும் கலந்தாய்வும் நடைபெறவுள்ளன.