சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வின் 34ம் நாள் கலந்தாய்வு தினத்தன்று மட்டும் மொத்தம் 3,468 பேர் கலந்துகொள்ளவில்லை. இதன் ஆப்சென்ட் விகிதம் 49.16% ஆகும். ஏறக்குறைய சரிபாதி.
பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 34ம் நாளில் மட்டும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,055. அதில் 3,468 பேர் கலந்துகொள்ளவில்லை. 24 பேர் கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யவில்லை.
யாரும் நிராகரிக்கப்படாத நிலையில், மொத்தம் 3,563 பேர் மட்டுமே ஒதுக்கீடு பெற்றனர். இந்த நாளின் ஆப்சென்ட் விகிதம்தான், பிற பொதுப்பிரிவு கலந்தாய்வு நாட்களுடன் ஒப்பிடுகையில், மிக அதிகம்.
இந்த 34 நாட்களில் இதுவரை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,219 பேர். அவர்களில், வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 55,665 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 463 பேர்.
ஒதுக்கீடு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,091 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 31.95%. கவுன்சிலிங் முடிவில், காலியிடங்களின் எண்ணிக்கை 60,000 என்ற அளவைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.